புதன், 4 ஜனவரி, 2017

அழைப்பிதழ்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம். 

             வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.


           ஆக்கப்பூர்வமான எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் தங்களது சொந்த குரலில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும். 

            குரல் பதிவிடாதவர்கள் தற்காலிகமாக குழுவிலிருந்த நீக்கப்பட்டுவார்கள். அவர்களுக்கு பேச தனி பயிற்சி அளிக்கக்படும். பேச இயலாதவர்கள் பார்வையாளராக இருக்கலாம்.

             பேசவும் கேட்கவும் ஆர்வம் உள்ளவர்கள் சிவகிரி ரேடியோ  குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.


ரேடியோ என இந்த வாட்ஸ்சப் குழுவுக்கு பெயர் வைத்துள்ளமைக்கு காரணம் ரேடியோ என்றால் ஒரு முனையில் பேசுவோரின் குரலை பலமுனைகளில் கேட்கலாம் என பலராலும் அறியப் பட்டுள்ளதே ஆகும். இந்த குழு பேசுவதற்காவும் கேட்பதற்காவும் மட்டுமே  உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பெயரின் மூலமாக உணர்த்தவே ரேடியோ என பெயரிட்டுள்ளோம்.

      இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மெசேஜ் வசதியின் பயனால் இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பேச முடியும். இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி நாம் சொந்தமாக பேசி பல நல்ல கருத்துக்களை உலகம் முழுமையும் விதைகளாக தூவ முடியும் என தொடர்ச்சியாக முயன்று வருகிறோம்.

      இம் முயற்சியின் பயனாக இந்த மடலை தாங்கள் வாசித்துக் கொண்டுள்ளீர்கள். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. பொது வெளியில் சில விநாடிகள் கூட பேசத் தயங்கிய பலரும் சிவகிரி ரேடியோவில் பேசத் தொடங்கிய குறுகிய காலத்தில் மிகுந்த நம்பிக்கை பெற்று தங்களின் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். அதோடு அவர்கள் கூறிய கருத்துக்களால் குழுவே பெரும் பயன் அடைந்துள்ளது.

      சிவகிரி ரேடியோவில் பேச நேரம் காலம் தடையில்லை. அவரவர் நேர வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் 24x7 பேசலாம். உங்களின் குரலை பதிவேற்றியவுடன் குழுவில் உள்ள அனைவரின் கருவிகளிலும் தானாகவே தரவிறக்கமாகிவிடும். இதற்கான டேட்டா செலவு மிகவும் குறைவு என்பதே இதன் சிறப்பாகும்.

      சிவகிரி ரேடியோவில் பேசுவது மிகவும் எளிதாகும். தங்களின் மொபைலில் உள்ள ஹட் போனை வசதியாக காதில் மாட்டிக் கொள்ளவும். பிறகு வாட்சஸ்பில் இடது பக்கம் கீழ் மூலையில் கடைசியாக உள்ள மைக் போன்ற அடையாளதை ஒரு விரலால் அழுத்தி பிடித்துக் கொண்டு நீங்கள் போனில் பேசுவதைப் போல் இயல்பாக பேசலாம். சுமார் மூன்று நிமிடங்கள் வரை பேசிய பின்னர் அழுத்திப் பிடித்திருக்கும் விரலை விடுவித்தால் போதுமானது தாங்கள் அதுவரையில் பேசியவை சிவகிரி ரேடியோ குழிவில் ஒலிக்கும். இதே போல் ஒவ்வொரு முறையும் பேசலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம். அதே போல் மற்ற நண்பர்கள் பேசுவதைக் பாடல்கள் கேட்பதைப் போல் எளிமையாக கேட்கலாம்.

      சிவகிரி ரேடியோவில் படைப்புத் திறன் மிகுந்த நல்லவர்கள் கூடியுள்ள வேடந்தாங்கல் என்றால் அது மிகையாகாது. பல்துறை வல்லூநர்கள் நாள்தோறும் தத்தமது அனுபவங்களை கல்வியாக வழங்கி வருகிறார்கள். அதனைக் கேட்போர் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். ஒரே கருவியில் குடும்பம் முழுமையும் கேட்போர் இங்கே அதிகம் என்பதே இதன் சிறப்பாகும்.

      சிவகிரி ரேடியோவில் பதிவாகின்ற குரல்கள் காலத்துக்கும் அழியாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் இந்த http://sivagiriradio.blogspot.in
தளத்தில் பதிவேற்றி ஆவணமாக பாதுகாத்தும் வருகிறோம். இதனால் குழுவில் அங்கம் வகிக்க இயலாத நண்பர்களும் கேட்க முடியும். இதன் காரணமாக சிவகிரி ரேடியோ குழுவில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே பதிவாகின்றன.

      படைப்புத் திறன் மிகுந்த மகளிர் நண்பர்களுக்கு வடிகாலாகவும், பேச்சாற்றலை வளர்க்க விரும்பும் இளையோரின் வேலைவாய்ப்புக்கு ஊக்குவிப்பாகவும் சிவகிரி ரேடியோ உள்ளது. இங்கே பங்களிப்பு செலுத்தி தங்களின் அனுபவங்களை கல்வியாக அளித்து சிவகிரி ரேடியோவை அட்சய பாத்திரமாக மாற்றிமைத்துள்ள அனைவருக்கும் உங்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

      இக்குழுவானது தனி நபரை சார்ந்தில்லாமல் அமைப்பு ரீதியாக நிரந்தரமாக செயல்பட வேண்டும் எனும் நோக்கில் சம அதிகாரம் பெற்ற எட்டு நண்பர்களை கொண்ட நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகிரி ரேடியோவை திறம்பட நிர்வகிக்க வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள இந்த எட்டு நண்பர்கள் மட்டும் அடங்கிய ஒரு வாட்ஸ்சப் குழு தனியாக இயங்கி வருகிறது.

நிர்வாகக் குழுவினர் விபரம் வருமாறு:-

திரு.கவியரசு P.hd அவர்கள், பேராசிரியர், விண்வெளித் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. சொந்த ஊர் மயிலாடுதுறை.

திரு.சண்முகம் MA அவர்கள் இயற்கை விவசாயி, ஹாம் ரேடியோ ஒருங்கிணைப்பாளர், சின்னவெத்தி பாளையாம், மொடக்குறிச்சி – ஈரோடு.

திரு.கு.முருகபூபதி, M.Com.,MBA., அவர்கள், உள் தணிக்கையாளர்/ஆய்வாளர், ஆயுள் காப்பீட்டுக் கழகம், LIC கட்டிடம், சென்னை. சொந்த ஊர் சிவகிரி.

திருமதி.ச.ரா..வித்யாசங்ககிரி MBA., அவர்கள் மகளிர் முன்னேற்ற முற்போக்கு சிந்தனையாளர், கோவை.

திரு.Dr.மார்டின் சாம் ஞானராஜ்,M.Se,.P.hd., அவர்கள், மாற்று எரிசக்தி துறை ஆய்வாளர், திருச்சி. (சருகுகள் மூலம் மின்சாரம்) சொந்த ஊர் தாராபுரம்.

திரு.த.முகேஷ் BE., புலம் பெயர்ந்த தமிழர் நல அமைப்பு, சென்னை. சொந்த ஊர் குஜியியாம்பாறை, திண்டுக்கல்

திரு.ரகுபதி MA.,M.ed., ஆங்கில துறை முதுநிலை ஆசிரியர்,சிவகிரி.சொந்த ஊர் ஈரோடு.

Dr.திரு.சி.எ.சரவணன் M.Se., அக்கு ஹீலர், மாற்று மருத்துவ சிகிச்சையாளர், புல்லாங்குழல் கலைஞர், ஆயுள் காப்பீட்டுக் கழகம்,கோவை.
     
      மேற்கண்ட நிர்வாகக் குழு நண்பர்கள் சுற்று முறையில் தினம் ஒருவராக நெறியாளர் பொறுப்பேற்று சிவகிரி ரேடியோ குழுவை நெறிபடுத்தி வருகிறார்கள். அவரர் பொறுப்பேற்கின்ற நாளில் மிக சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் பெற்றுள்ளார்கள். உள் நோக்கத்துடன், பொது அமைதியைக் கெடுக்கின்ற, சர்ச்சைக்குறிய கருத்துக்கள் என அந்த நாளைய நெறியாளர் கருதினால் முன்னறிவிப்பு இன்றி உடனடியாக குழுவிலிருந்து நீக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

நிர்வாகக் குழுவுக்காக 
கு,முருகபூபதி, அமைப்பாளர்,
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
கைபேசி எண்.98650 46197
k.murugaboopthy@gmail.com
http://sivagiriradio.blogspot.in


   

வியாழன், 17 நவம்பர், 2016

கவியரசு

         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.கவியரசு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அவர்கள் பங்கேற்று “வான்வழி பயண ஆய்வுகள்” எனும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திருமதி கோகிலாம்பாள், திரு.சரவணன்ரா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். தாங்கள் அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்
உதவிக்கு:-
கு.முருகபூபதி 9865046197

புதன், 2 நவம்பர், 2016

Hariharasuthan


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.Hariharasuthan அவர்கள் பங்கேற்று “கபாலி திரை விமர்சனம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திரு.மார்டின்,,ஜோஸ்வா,முகேஷ், ராமசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திரு.ரகுபதி ஆசிரியர் அவர்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

செவ்வாய், 1 நவம்பர், 2016

சக்திவேலாயிதம்



         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.சக்திவேலாயிதம் அவர்கள் பங்கேற்று “நெருப்பு விழிகள்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

ராஜேஸ்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.ராஜேஸ் அவர்கள் பங்கேற்று “பயணங்களில் பாடம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய ராஜேஸ் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

பிரபுகுமார்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் செல்வன் பிரபுகுமார் பங்கேற்று “இன்றைய ஊடகம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய பிரபுகுமார் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197


திங்கள், 31 அக்டோபர், 2016

பாலகிருஷ்ணன்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் 26.10.2016 அன்று திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று “தன் சுத்தம்” எனும் தலைப்பில் சுகாதர குறிப்புக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துக் கோவையானது அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.


உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

புதன், 7 செப்டம்பர், 2016

இராமலிங்கம்


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் 07.09,2016 - 13.09.2016  திரு.இராமலிங்கம் "பிரமுகர்" பொறுப்பேற்று நண்பர்களோடு கலந்துரையாட இசைந்துள்ளார்கள். இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்க திரு.ஜோஸ்வா அவர்களை கேட்டோம். அவரும் ஏற்று நடத்தி வருகிறார்கள் 
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. திரு,இராமலிங்கம் மற்றும் ஜோஸ்வா குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜாகீர்


எல்.ஐ.சி நிறுவனத்தின் 61ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு (1956-2016)
"நேர்காணல் நிகழ்ச்சி"
இந்த "வாட்ஸ் அப்" வழி நேர்காணல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம்.
சிறப்பு விருந்தினர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள், தன்னம்பிக்கை பயிற்சியாளர் மற்றும் முன்னணி வளர்ச்சி அதிகாரி ஆயுள் காப்பிட்டுக் கழகம், சிவகிரி, கோவை கோட்டம்.
திரு.ஜாகீர் உசேன் அவர்கள் வடித்த குரல் ஓவியத்தை 
பதிவிறக்கம் செய்து செவிமடுக்க 


@கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு.
http://sivagiriradio.blogspot.in. 
சிவகிரிரேடியோ கு.முருகபூபதி 


கொடுமுடி வட்டார செய்திகள் எல்லோரையும் விரும்ப வைக்கும் இந்த சிரிப்பு ...உங்களுக்கு இறைவன் கூடுதலாக கொடுத்திட்ட வெகுமதி...பாதுகாத்து எல்லோருக்கும் பகிருங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

சுபாஷ் கிருஷ்ணசாமி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் உடுமலைப் பேட்டை திரு.சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள்.
http://www.drumsoftruth.com/  (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
இந்தவார பிரமுகர் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.






ஒருங்கிணைப்பு:-

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வித்தியா சங்கரி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் "வாரம் ஒரு நேர்காணல்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
28.08.2016 அன்று கோவையைச் சேர்ந்த திருமதி.வித்தியா சங்கரி MBA., அவர்கள் "நேர்காணல்" அளித்தார்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திருமதி.வித்தியா சங்கரி அவர்களோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 


ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மார்டின்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் திருச்சியை சேர்ந்த திரு.மார்டின் ஜோஸ்வா PHD அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள். (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திரு.மார்டின் அவர்கள் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 



ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

புதன், 24 ஆகஸ்ட், 2016

இராமசாமி


சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் இந்த வாரம் (10.09.2016) கோவையைச் சார்ந்த தொழிலதிபர் திரு.இராமசாமி அவர்கள் (அஞ்சூர்) பிரமுகராக பங்கேற்க இசைந்துள்ளார்கள்.
 Rams Rams (படத்தில் இருப்பவர்)
அவர் தனது பால்ய காலம் தொடங்கி சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் தான் வசித்த - வசிக்கின்ற ஊர்களின் அடையாளங்கள் பற்றிய நினைவுகளை - அனுபவங்களை கல்வியாக வழங்க உள்ளார்கள்.
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருப்பிடத்தில் இருந்தே பங்கேற்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு வார காலம் குழுவில் உள்ள அனைவருடனும் குரல் ஓவியம் படைத்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.
திரு.இராமசாமி அவர்களின் கலந்துரையாடல் தொகுப்பை 
ஒவ்வொன்றாக கேட்க கீழே அழுத்தவும்.







ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோகிலாம்பாள்


தினம் ஒரு திருக்குறள்
 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக் கூடத்திற்கு குரல் சேவை செய்து வருகின்ற திருமதி கோகிலாம்பாள் அம்மையாரின் (79) தினம் ஒரு திருக்குறள் எனும் நிகழ்ச்சி நாளை 100வது குரல்/குறள் நமது செவிகளில் ஊடுருவி உலா வர உள்ளது.

இவர் தொடங்கிய நாள் முதல் தொய்வு இன்றி குழுவை இயக்கும் அச்சாணியாக மாறி அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.திரு.சரவணன் அவர்களின் தாயார் செய்து வருகின்ற இந்த திருக்குறள் சேவையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சிவகிரி ரேடியோவில் திருமதி கோகிலாம்பாள் அவர்கள் “வாரம் ஒரு பிரமுகர்” எனும் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் ஓவியம் படைத்துள்ளார். அதனை தாங்களும் செவிமடுக்க வேண்டுகிறோம் 
இங்கே அழுத்தவும் 




உதவுக்கு:-
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர் , மக்கள் புன்னகைக்கிறார்கள் , கண்களுக்கான கண்ணாடிகள், வெளிப்புறம் மற்றும் குளோஸ் அப்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

தங்கவேல்

சிவகிரி திரு.தங்கவேல் அவர்களுக்கு (ரஸ்கர்) 85வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். (15.08.2016) தனது மகன் திரு.செந்தில்குமார் IPS அவர்கள் தான் ஆற்றிய சிறந்த சேவைக்காக முதல்வரின் பதக்கமும் பரிசும் பெற உள்ள செய்தி அறிந்து மன மகிழ்ச்சி அடைந்தார். 
திரு,தங்கவேல் அவர்களின் கலந்துரையாடல் கேட்க இங்கே அழுத்தவும்

ஒருங்கிணைப்பு:-

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திரு.S.R.ஈஸ்வரன்


திரு.S.R.ஈஸ்வரன் அவர்களின் 



சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி.

இன்றைய வி.ஐ.பி திரு.S.R.ஈஸ்வரன் அவர்கள், நுகர்பொருள் வணிகர், பாரதி தெரு, சிவகிரி. தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள தனது இளைய மகன் திரு.கோபிநாத் அவர்களின் இல்லத்திலிருந்து...
தலைப்பு:-
"சிவகிரி to சிங்கப்பூர்"
பால்ய காலம் தொடங்கி தனது சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் சிவகிரியின் அடையாளங்கள் பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவருடன் பேசி மகிழ அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கு.முருகபூபதி. 9865046197

ஞாயிறு, 10 ஜூலை, 2016

தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்


*தினமும் 3நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்*
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.


தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.


இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் -சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறுஎந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

நன்றி
Akilandeshwari Muthaiah