சினிமாவும்நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமாவும்நானும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூன், 2016

இசையெனும் இல்லாள்

வீணையின் ஒற்றை
நரம்பொலியாய்
அதிர்ந்தடங்குகிறது
அவளை சந்திக்கும்
ஒவ்வொரு கணமும்
ஏனைய நாட்களில்
ஏதோ ஒரு மூலையில்
தூசி படிந்து
கேட்பாரற்று கிடக்கிறது
அவளே காதலியான
அந்நாட்களில் கூடவே
பக்கவாத்தியமும்
சேர்ந்தே ஒலித்து
கச்சேரி நடத்தின
மனைவியான பிறகு
சேர்ந்திசைத்தவை
காணாமல் போய்
இப்போது வெறுமனே
ஜால்ரா ஓசை மட்டும்
தினமும் கேட்கிறது
எங்கள் வீட்டில்
-மதன்.

திங்கள், 11 ஜனவரி, 2016

சினிமாவும் நானும் பாலு கோவை

சினிமாவும் நானும் பாலு கோவைஅன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம்இப்பவும் "சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்" எனும் வாட்ஸ் அப் குழுவில் வாய்ஸ் மேசேஜ் மூலம் கோவையைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் 11.01.2016 அன்று சினிமாவும் நானும் என்ற தலைப்புக்கு தலைமை ஏற்று நடத்திய கலந்துரையாடல்களில் சில இங்கு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன

எங்களின் சுய படைப்பைக் கேட்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.. தங்களின் மேலான கருத்துரைகள் எங்களை மேலும் வளர்த்தெடுக்கும்உதவிக்கு:- கு.முருகபூபதி-9865046197 



திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் 
சினிமாவும் நானும் கேட்க