ஞாயிறு, 3 ஜூலை, 2016

தோழர் ஆறுமுகம் காலமானார்

கொடுமுடியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாக திகழ்ந்த தோழர் ஆறுமுகம் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த தோழர் ஆறுமுகம் ஜூலை- 1 ம் தேதி கொடுமுடி அக்கிரஹார வீதியில் அவரது இல்லத்தில் மரணமடைந்தார். 

கட்சியில் கொடுமுடி ஒன்றிய செயலாளராக, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக, தொழிற்சங்க தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்… சிறந்த பேச்சாளர்…ஜனசக்தி நாளிதழில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதுவார் மக்களுக்கான ஏராளாமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என உழைக்கும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடியவர் தோழர் ஆறுமுகம். 

சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக கொடுமுடி பகுதியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி அதன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர். தோழரின் மறைவு இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி 

வியாழன், 9 ஜூன், 2016

புதன், 8 ஜூன், 2016

இசையெனும் இல்லாள்

வீணையின் ஒற்றை
நரம்பொலியாய்
அதிர்ந்தடங்குகிறது
அவளை சந்திக்கும்
ஒவ்வொரு கணமும்
ஏனைய நாட்களில்
ஏதோ ஒரு மூலையில்
தூசி படிந்து
கேட்பாரற்று கிடக்கிறது
அவளே காதலியான
அந்நாட்களில் கூடவே
பக்கவாத்தியமும்
சேர்ந்தே ஒலித்து
கச்சேரி நடத்தின
மனைவியான பிறகு
சேர்ந்திசைத்தவை
காணாமல் போய்
இப்போது வெறுமனே
ஜால்ரா ஓசை மட்டும்
தினமும் கேட்கிறது
எங்கள் வீட்டில்
-மதன்.

திங்கள், 9 மே, 2016

உற்சாகக் குளியல்

கோடை வெப்பத்தைக் குறைக்க உற்சாகக் குளியல்.

இடம் ஈரோடு மாவட்டம் சிவகிரி கவுடண்டம் பாளையம். கு.முருகபூபதி 9865046197.



புதன், 4 மே, 2016

Lokesh







முதல் முயற்சியிலேயே நீச்சல் கற்று சிறப்பித்த நிகழ்வு. கோவை லோகேஷ் குமார் த/பெ சத்தியமூர்த்தி. @கு.முருகபூபதி 9865046197.

வெள்ளி, 25 மார்ச், 2016

திருவிளக்கு வழிபாடு.

ஆயிரக் கணக்கான தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு. 
இடம் சிவகிரி காமாட்சியம்மன் திருக்கோவில்.



சிவகிரி காமாட்சியம்மன்

இணைய தளம்:-
http://sivagirikamatchiamman.blogspot.in
சிவகிரி காமாட்சியம்மன்
பக்தர்கள் மேம்பாட்டு இணைய இதழ் தொடக்க விழா
மற்றும் ஆசிரியர் குழு அறிமுகம்.
நிறுவனர்கள்
திரு.SPS கமலக்கண்ணன் அவர்கள்
திரு.சி.ஆறுமுகம் M.Sc.,M.Ed.,M.A.,M.Phil., அவர்கள்
பொறுப்பாசிரியர்
திரு.மு.வரதராஜன். M.A., HDC., அவர்கள்
அலைபேசி எண் 94432 95735
----------------------------------------------------------
ஆசிரியர் குழு
திரு.கு.முருகபூபதி M.Com.,MBA., அவர்கள்
திரு.V.கணேசமூர்த்தி ME., அவர்கள்
திரு.M.மோகன்குமார் BE., அவர்கள்
திரு.M.தினேஸ்குமார் BE., அவர்கள்
----------------------------------------------------------