புதன், 4 ஜனவரி, 2017

அழைப்பிதழ்

அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம். 

             வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.

           ஆக்கப்பூர்வமான எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் தங்களது சொந்த குரலில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும். 

            குரல் பதிவிடாதவர்கள் தற்காலிகமாக குழுவிலிருந்த நீக்கப்பட்டுவார்கள். அவர்களுக்கு பேச தனி பயிற்சி அளிக்கக்படும். பேச இயலாதவர்கள் பார்வையாளராக இருக்கலாம்.

             பேசவும் கேட்கவும் ஆர்வம் உள்ளவர்கள் சிவகிரி ரேடியோ  குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.

ரேடியோ என இந்த வாட்ஸ்சப் குழுவுக்கு பெயர் வைத்துள்ளமைக்கு காரணம் ரேடியோ என்றால் ஒரு முனையில் பேசுவோரின் குரலை பலமுனைகளில் கேட்கலாம் என பலராலும் அறியப் பட்டுள்ளதே ஆகும். இந்த குழு பேசுவதற்காவும் கேட்பதற்காவும் மட்டுமே  உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பெயரின் மூலமாக உணர்த்தவே ரேடியோ என பெயரிட்டுள்ளோம்.

      இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மெசேஜ் வசதியின் பயனால் இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பேச முடியும். இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி நாம் சொந்தமாக பேசி பல நல்ல கருத்துக்களை உலகம் முழுமையும் விதைகளாக தூவ முடியும் என தொடர்ச்சியாக முயன்று வருகிறோம்.

      இம் முயற்சியின் பயனாக இந்த மடலை தாங்கள் வாசித்துக் கொண்டுள்ளீர்கள். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. பொது வெளியில் சில விநாடிகள் கூட பேசத் தயங்கிய பலரும் சிவகிரி ரேடியோவில் பேசத் தொடங்கிய குறுகிய காலத்தில் மிகுந்த நம்பிக்கை பெற்று தங்களின் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். அதோடு அவர்கள் கூறிய கருத்துக்களால் குழுவே பெரும் பயன் அடைந்துள்ளது.

      சிவகிரி ரேடியோவில் பேச நேரம் காலம் தடையில்லை. அவரவர் நேர வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் 24x7 பேசலாம். உங்களின் குரலை பதிவேற்றியவுடன் குழுவில் உள்ள அனைவரின் கருவிகளிலும் தானாகவே தரவிறக்கமாகிவிடும். இதற்கான டேட்டா செலவு மிகவும் குறைவு என்பதே இதன் சிறப்பாகும்.

      சிவகிரி ரேடியோவில் பேசுவது மிகவும் எளிதாகும். தங்களின் மொபைலில் உள்ள ஹட் போனை வசதியாக காதில் மாட்டிக் கொள்ளவும். பிறகு வாட்சஸ்பில் இடது பக்கம் கீழ் மூலையில் கடைசியாக உள்ள மைக் போன்ற அடையாளதை ஒரு விரலால் அழுத்தி பிடித்துக் கொண்டு நீங்கள் போனில் பேசுவதைப் போல் இயல்பாக பேசலாம். சுமார் மூன்று நிமிடங்கள் வரை பேசிய பின்னர் அழுத்திப் பிடித்திருக்கும் விரலை விடுவித்தால் போதுமானது தாங்கள் அதுவரையில் பேசியவை சிவகிரி ரேடியோ குழிவில் ஒலிக்கும். இதே போல் ஒவ்வொரு முறையும் பேசலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம். அதே போல் மற்ற நண்பர்கள் பேசுவதைக் பாடல்கள் கேட்பதைப் போல் எளிமையாக கேட்கலாம்.

      சிவகிரி ரேடியோவில் படைப்புத் திறன் மிகுந்த நல்லவர்கள் கூடியுள்ள வேடந்தாங்கல் என்றால் அது மிகையாகாது. பல்துறை வல்லூநர்கள் நாள்தோறும் தத்தமது அனுபவங்களை கல்வியாக வழங்கி வருகிறார்கள். அதனைக் கேட்போர் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். ஒரே கருவியில் குடும்பம் முழுமையும் கேட்போர் இங்கே அதிகம் என்பதே இதன் சிறப்பாகும்.

      சிவகிரி ரேடியோவில் பதிவாகின்ற குரல்கள் காலத்துக்கும் அழியாமல் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும் எனும் உயரிய நோக்கில் இந்த http://sivagiriradio.blogspot.in
தளத்தில் பதிவேற்றி ஆவணமாக பாதுகாத்தும் வருகிறோம். இதனால் குழுவில் அங்கம் வகிக்க இயலாத நண்பர்களும் கேட்க முடியும். இதன் காரணமாக சிவகிரி ரேடியோ குழுவில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே பதிவாகின்றன.

      படைப்புத் திறன் மிகுந்த மகளிர் நண்பர்களுக்கு வடிகாலாகவும், பேச்சாற்றலை வளர்க்க விரும்பும் இளையோரின் வேலைவாய்ப்புக்கு ஊக்குவிப்பாகவும் சிவகிரி ரேடியோ உள்ளது. இங்கே பங்களிப்பு செலுத்தி தங்களின் அனுபவங்களை கல்வியாக அளித்து சிவகிரி ரேடியோவை அட்சய பாத்திரமாக மாற்றிமைத்துள்ள அனைவருக்கும் உங்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

      இக்குழுவானது தனி நபரை சார்ந்தில்லாமல் அமைப்பு ரீதியாக நிரந்தரமாக செயல்பட வேண்டும் எனும் நோக்கில் சம அதிகாரம் பெற்ற எட்டு நண்பர்களை கொண்ட நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகிரி ரேடியோவை திறம்பட நிர்வகிக்க வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள இந்த எட்டு நண்பர்கள் மட்டும் அடங்கிய ஒரு வாட்ஸ்சப் குழு தனியாக இயங்கி வருகிறது.

நிர்வாகக் குழுவினர் விபரம் வருமாறு:-

திரு.கவியரசு P.hd அவர்கள், பேராசிரியர், விண்வெளித் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. சொந்த ஊர் மயிலாடுதுறை.

திரு.சண்முகம் MA அவர்கள் இயற்கை விவசாயி, ஹாம் ரேடியோ ஒருங்கிணைப்பாளர், சின்னவெத்தி பாளையாம், மொடக்குறிச்சி – ஈரோடு.

திரு.கு.முருகபூபதி, M.Com.,MBA., அவர்கள், உள் தணிக்கையாளர்/ஆய்வாளர், ஆயுள் காப்பீட்டுக் கழகம், LIC கட்டிடம், சென்னை. சொந்த ஊர் சிவகிரி.

திருமதி.ச.ரா..வித்யாசங்ககிரி MBA., அவர்கள் மகளிர் முன்னேற்ற முற்போக்கு சிந்தனையாளர், கோவை.

திரு.Dr.மார்டின் சாம் ஞானராஜ்,M.Se,.P.hd., அவர்கள், மாற்று எரிசக்தி துறை ஆய்வாளர், திருச்சி. (சருகுகள் மூலம் மின்சாரம்) சொந்த ஊர் தாராபுரம்.

திரு.த.முகேஷ் BE., புலம் பெயர்ந்த தமிழர் நல அமைப்பு, சென்னை. சொந்த ஊர் குஜியியாம்பாறை, திண்டுக்கல்

திரு.ரகுபதி MA.,M.ed., ஆங்கில துறை முதுநிலை ஆசிரியர்,சிவகிரி.சொந்த ஊர் ஈரோடு.

Dr.திரு.சி.எ.சரவணன் M.Se., அக்கு ஹீலர், மாற்று மருத்துவ சிகிச்சையாளர், புல்லாங்குழல் கலைஞர், ஆயுள் காப்பீட்டுக் கழகம்,கோவை.
     
      மேற்கண்ட நிர்வாகக் குழு நண்பர்கள் சுற்று முறையில் தினம் ஒருவராக நெறியாளர் பொறுப்பேற்று சிவகிரி ரேடியோ குழுவை நெறிபடுத்தி வருகிறார்கள். அவரர் பொறுப்பேற்கின்ற நாளில் மிக சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் பெற்றுள்ளார்கள். உள் நோக்கத்துடன், பொது அமைதியைக் கெடுக்கின்ற, சர்ச்சைக்குறிய கருத்துக்கள் என அந்த நாளைய நெறியாளர் கருதினால் முன்னறிவிப்பு இன்றி உடனடியாக குழுவிலிருந்து நீக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.

நிர்வாகக் குழுவுக்காக 
கு,முருகபூபதி, அமைப்பாளர்,
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
கைபேசி எண்.98650 46197
k.murugaboopthy@gmail.com
http://sivagiriradio.blogspot.in

4 கருத்துகள்:

கே.முருகபூபதி இலக்கியவட்டம் சொன்னது…

தங்களது பின்னூட்டங்கள் மூலம் செழுமை படுத்த வேண்டுகிறேன்.

கே.முருகபூபதி இலக்கியவட்டம் சொன்னது…

சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்:-

அன்புசால் பெருந்தகையீர்!

வணக்கம். வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஆக்கப்பூர்வமான எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் தங்களது சொந்த குரலில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும்.

குரல் பதிவிடாதவர்கள் தற்காலிகமாக குழுவிலிருந்து நீக்கப்பட்டுவார்கள். அவர்களுக்கு பேச தனி பயிற்சி அளிக்கக்படும். பேச இயலாதவர்கள் பார்வையாளராக இருக்கலாம்.

பேசவும் கேட்கவும் ஆர்வம் உள்ளவர்கள் சிவகிரி ரேடியோ  குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.

நிர்வாகக் குழுவுக்காக

கு.முருகபூபதி, அமைப்பாளர்,

சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம். 9865046197. k.murugaboopthy@gmail.com