புதன், 8 ஜூன், 2016

இசையெனும் இல்லாள்

வீணையின் ஒற்றை
நரம்பொலியாய்
அதிர்ந்தடங்குகிறது
அவளை சந்திக்கும்
ஒவ்வொரு கணமும்
ஏனைய நாட்களில்
ஏதோ ஒரு மூலையில்
தூசி படிந்து
கேட்பாரற்று கிடக்கிறது
அவளே காதலியான
அந்நாட்களில் கூடவே
பக்கவாத்தியமும்
சேர்ந்தே ஒலித்து
கச்சேரி நடத்தின
மனைவியான பிறகு
சேர்ந்திசைத்தவை
காணாமல் போய்
இப்போது வெறுமனே
ஜால்ரா ஓசை மட்டும்
தினமும் கேட்கிறது
எங்கள் வீட்டில்
-மதன்.

கருத்துகள் இல்லை: