ஞாயிறு, 11 அக்டோபர், 2015

அறிமுகம்

இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் வசிக்கின்ற / வசித்த நண்பர்களைக் கொண்டு ஒரு ”வாட்ஸ் அப்” குழுவை உருவாக்கினோம். அதன்  தொடர்ச்சியாக ”கல்வி அறக்கட்டளை” உருவாகியுள்ளது.

”சிவகிரி ரேடியோ கல்வி அறக்கட்டளை” என்பது குரல் வழியாக சேவையை வழங்கும் பொதுவான அமைப்பாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்துள்ள ‘சுய அனுபவங்கள்’ நமது மனித குலத்திற்கே உயரிய கல்வியாக இருக்கும் என்பது அறக்கட்டளையின் கணிப்பாகும். அத்தகைய அனுபவங்களை அனைவரும் எளிதாக வெளியிட...   “சிவகிரி ரேடியோ” என பெயரும் இட்டோம்.

வாட்ஸ் அபில் உள்ள ஆனால் இது வரை பலரும் பயன்படுத்தாமல் உள்ள ”வாயிஸ் மெசேஜ்” என்ற வசதியின் மூலமாக அனைவரும் பேசியதை https://soundcloud.com/sivagiriradio என்ற தளத்தில் பதிவேற்றி வருகிறோம். 
தங்களின் ஆலோசனைகள் வேண்டி... கு.முருகபூபதி 9865046197.

1 கருத்து:

janaki raman சொன்னது…

எனது இனிய நல்வாழ்த்துக்கள்.